September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

நடிகையர் திலகம் படத்துக்கு குவியும் பாராட்டுக்கள். விவரம் உள்ளே

இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் மறைந்த முன்னாள் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்திற்கு தமிழில் நடிகையர் திலகம் என்றும் தெலுங்கில் மகாநதி என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சாவித்ரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

மேலும், ஜெமினிகணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும், ஜமுனாவாக சமந்தாவும், நாகேஷ்ராவாக நாக சைத்தன்யாவும் நடிக்கிறார்கள்.பழம்பெரும் நடிகை ஜமுனாவுக்கு இந்த படத்தில் திருப்தி இல்லை. சாவித்திரியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவர் இல்லை என்று விமர்சித்து இருந்தார்.மற்றவர்களைவிட சாவித்திரியை எனக்குதான் அதிகமாக தெரியும். சாவித்திரியைப்போல் எந்த நடிகையாலும் நடிக்க முடியாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை முழுவதுமாக படித்தும் அவர் நடித்திருந்த படங்களை பார்த்தும் நடித்து வருகிறேன். சாவித்திரி படத்தில் நடிக்க எனக்கு தகுதி இருக்கிறது என கூறினார். இந்த நிலையில் சாவித்திரி, ஜெமினி கணேசனாக நடித்த கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் தோற்றங்கள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் தோற்றம் பிரமாதமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகிறார்கள். இதனால் நடிகையர் திலகம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news