Inandoutcinema - Tamil cinema news

44 வருடங்களுக்கு பிறகு மீணடும் இந்த சாதனையை செய்த ஜெர்மனி அணி. விவரம் உள்ளே

உலக கோப்பை கால்பந்து திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு சோச்சி நகரில் அரங்கேறிய எப் பிரிவு லீக் ஆட்டத்தில் உலக சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ அணியுமான ஜெர்மனி, சுவீடனுடன் மோதியது. வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான நிலைமையில் ஜெர்மனி களம் இறங்கியது.

ஆரம்பத்தில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி பதற்றத்துக்கு உள்ளானது ஜெர்மனி அணி. 0-1 என்ற கணக்கில் பின்தங்கியதால் ஜெர்மனி வீரர்கள் நெருக்கடிக்கு உள்ளானார்கள். 80 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி முதல் சுற்றுடன் மூட்டையை கட்டி விடுமோ? என்ற ரசிகர்கள் கலக்கத்தில் இருந்தனர். பிறகு ஆட்டத்தில் அதிரடி காட்டி ஜெர்மனி வீரர்கள் அமர்களப்படுத்தினர்.

முடிவில் ஜெர்மனி 2–1 என்ற கோல் கணக்கில் சுவீடனை தோற்கடித்து முதல் வெற்றியுடன் அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது. உலக கோப்பை போட்டியில் முதல் பாதியில் பின்தங்கி இருந்து, பின்னர் பெற்று வெற்றி பெறுவது 1974ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 80 வருடமாக முதல் சுற்றில் ஜெர்மனி அணி தோற்றதில்லை என்ற வரலாற்று பெருமையும் உண்டு.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news