September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

வரலாற்று தோல்வியை சந்தித்த ஜெர்மனி. அதிர்ச்சியில் ரசிகர்கள்

21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றான 2-வது சுற்றுக்கு முன்னேறும். இந்த உலக கோப்பை திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்னிலையில் நேற்று ஜெர்மனி அணியும், மெக்சிகோ அணியும் மோதின. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 35-வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஹிர்விங் லோஜனோ, தனக்கு கிடைத்த பந்தை நேர்த்தியாக கோலாக்கி, அரங்கை அதிர வைத்தார். இதனால் முதல் பாதியில் மெக்சிகோ 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதற்க்கு பதிலடி தர முயற்சித்த ஜெர்மனி அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விறுவிறுப்பு நிறைந்த இந்த ஆட்டத்தின் முடிவில் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. நடப்பு உலக கோப்பையில் மிகப்பெரிய அணியான ஜெர்மனி தோல்வியை தழுவியதால் கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் 1982-ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பை தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனி சந்தித்த முதல் தோல்வியாக இது பதிவானது. 38 வருடங்களுக்கு பிறகு ஜெர்மனி சந்தித்த முதல் தோல்வி இது என்பதால் அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news