September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

நடிகர் பிரகாஷ் ராஜை கொல்ல திட்டம் – திடுக்கிடும் தகவல் அம்பலம்

சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அரசின் திட்டங்களையும், பிரதமர் மோடியை அடிக்கடி விமர்சித்தும் கருத்து தெரிவித்து வருகிறார். மேலும் #JustAsking என்ற அமைப்பு மூலம் பொதுமக்கள் பிரச்னை குறித்து கேள்வி அரசுக்கு எழுப்பி வருகிறார்.

இந்நிலையில், மூட நம்பிக்கைகளுக்கும், இந்துத்துவா வலதுசாரி கொள்கைகளுக்கு எதிராக எழுதி வந்த கர்நாடக பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 2017 செப்டம்பர் 5ம் தேதி மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்படடார். இச்சம்பவம் நாடு முழுவுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிரகாஷ் ராஜ் பாஜகவை விமர்சித்தும் பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்து செய்யப்பட்டுள்ள நபர்கள் நடிகர் பிரகாஷ் ராஜையும் கொலையை செய்ய திடடம் தீட்டியது தற்போது தெரியவந்துள்ளது. அந்த கொலை வழங்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கைப்பற்றப்படட ஒரு டைரியில் அடுத்தடுத்து யாரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்கிற விவரம் தெரியவந்ததுள்ளது. அதில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், நடிகர் கிரிஷ் கர்நாட் ஆகியோர் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்ததுஇந்த சதி திட்டத்திற்கு “ஆப்ரேஷன் காகா” என்று பெயரிட்டுள்ளனர்.

இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் ”பெங்களூருவில் முற்போக்கு சிந்தனையாளர்,பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை திட்டமிட்டு கொலை செய்தவர்கள், நடிகர் பிரகாஷ் ராஜையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். சிறப்பு புலனாய்வு பிரிவு கூறுகிறது. என்னுடைய குரலை ஒடுக்கும் வகையிலான மிரட்டல். ஆனால், இப்படி மிரட்டல்கள் வரும்போது, என் குரல் மேலும் வலிமைபெறும். கோழைகளே, நீங்கள் இந்த வெறுப்பு அரசியலில் இருந்து எப்போது வெளியேறப்போகிறோம் என நினைத்துப்பார்க்கிறீர்களா”. என்று தெரிவித்துள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news