பிஜேபி தலைவர் முதல் அனிதா சம்பத் வரை 2.0 படத்தை கொண்டாடும் பிரபலங்கள்!

சென்னை: சங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது.  தியேட்டர்களில் படத்தை காண ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கிடக்கின்றனர். சென்னை, மும்பை, பெங்கலூரு போன்ற பல நகரங்களில் ரசிகர்கள் 2.0 படத்தை திருவிழா கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், 2.0 படத்தை பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் யார் என்ன வாழ்த்துசொல்லி இருக்காங்க.. பாப்போம் வாங்க.

நடிகர் ராகவா லாரன்ஸ்: 

ஹாய் பிரண்ட்ஸ், நான் தலைவரின் பிகப்பெரிய ரசிகன் என்று உங்க எல்லோருக்கும் தெரியும். தலைவர் படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவேன். ஆனால், இப்போது டெல்டா மாவட்டங்களில் இருப்பதால் படத்துக்கு செல்ல முடியவில்லை. இருப்பினும் படம் ஹிட் அடித்துள்ளதாக போன் செய்து கூறுகின்றனர். தலைவர் ரசிகர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். சங்கர் சாருக்கும், லைகா நிறுவனத்திற்கும் பெரிய நன்றி. என்று கூறியுள்ளார்.

நடிகர் சூரியா:

எல்லைகளை தாண்டிய கொண்டாட்டத்தை ரஜினி சார் அசால்டாக கொடுத்துள்ளார். என்னை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான். இயக்குனர் சங்கர் சாரின் நோக்கம் எனக்கும் எப்போதும் பிரம்பிப்பை தரும். அவர் சினிமாவின் ஆற்றலை நம்பவைக்கிறார். நாம் எவ்வாறு இசையை உணர வேண்டும் என்பதை ஏ.ஆர்.ரஹமான் சார் வரையறுத்துள்ளார். 2.0 நம் காதுகளுக்கு விருந்தாக இருக்கபோகிறது.

லைகா நிறுவனம் எடுத்துள்ள பிகப்பெரிய முயற்சி நம்பிக்கைகளுக்கு அப்பார்பட்டது. கண்டிப்பாக அவர்கள் நமது தமிழ் சினிமாவை சர்வதேச தரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.அக்‌ஷை குமார் சாரை வரவேற்கிறேன் தமிழில் அவரை பார்ப்பது விருந்தாக அமையும். மேலும், மொத்த படக்குழிவினருக்கும் பெரிய வாழ்த்துக்கள் தெரிவித்துகொள்கிறேன். இது இதைவிட பெரியதாக்க இருக்க முடியாது. 2.0 தியேட்டரில் உங்களை மகிழ்ச்சியிலும், ஆர்வத்திலும் ஆழ்த்தும். என்று கூறியுள்ளார்.

லதா ரஜினிகாந்த்

ஒரே வார்த்தையில் ‘வார்த்தைகளே இல்லை’ என்று கூறியுள்ளார்.

நடிகை நீத்து சந்திரா:

மும்பையில் உள்ள அரோரா தியேட்டரில் அதிகாலை 5 மணிக்கு ரசிகர்கள் கொண்டாடும் விடியோவை பதிவிட்டு, இதனால் தான் நான் தமிழ் சினிமாவையும், அதன் ரசிகர்களையும், அவர்கள் அன்பையும் நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத்:

2.0 உலகை தாண்டிய அனுபவம். இந்தியாவின் அனைத்து பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளும் திருத்தி எழுதப்படும். தலைவருக்கு தலை வனங்குகிறேன். மாஸ்டர் சங்கர் மற்றும் அக்சை குமார், ஏ.ஆர்.ரஹமான், லைகா நிறுவனம், எமி ஜாக்சன் ஆகியோரை டேக் செய்து அனைத்து படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

2.0 வெறித்தனம். தலைவா ஸ்கிரீன் உங்கள் நடிப்பால் ஸ்கிரின் பற்றி எரிகிறது. சங்கர் மற்றும் படக்குழிவினர் ஒரு காவியத்தை எடுத்து இந்திய சினிமாவின் தரத்தை ராஜாவை போல உச்சிக்கு கொண்டு சென்றுவிட்டிர்கள். அனைவரும் கொண்டாட வேண்டிய படம். என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் இணைய பிரபலமான செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்

2.0 படத்தில் என்னை யாராவது பார்த்தீர்களா? தலைவர் படத்தில் ஒரு பிரேம் வருவதே பெரும் பாக்கியம் தான், படத்தை காண ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். சர்காருக்கு பிறகு இப்போது 2.0 என்று பதிவிட்டுள்ளார்.

வினோஜ் பீ செல்வம் (பாஜக மாநில இளையஞர் அணி தலைவர்)

தனது குழந்தையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து, சூப்பஸ்டார் ரஜினிகாந்த்தின் குட்டி ரசிகன், முதல் நாள் முதல் காட்சியை காண நாங்கள் ரெடி என்று டீவிட் செய்துள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news