ஹர்பஜன் சிங்குடன் மோதும் ஆக்‌ஷன் கிங்

கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தீவிர ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார். சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி உள்ளார். சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார்.
அடுத்ததாக ஹர்பஜன் சிங் ‘பிரண்ட்ஷிப்’  என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர். பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

அர்ஜுன்

தற்போது இந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதில் அர்ஜுன், ஹர்பஜன் சிங்கிற்கு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news