பஹிரா படத்தின் மிரட்டலான போஸ்டர்!

திரிஷா இல்லனா நயன்தாரா என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ஆதிக் ரவிச்சந்திரன். முதல் படத்திலேயே இளைஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த அவர் அடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கி தோல்வியை தழுவினார். 

இந்நிலையில் தற்போது பிரபுதேவா வைத்து பஹிரா என்ற புது படத்தை இயக்கி வருகிறார். காதலர் தினத்தின் ஸ்பெஷலாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பரதன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம்  காதலன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என யூகிக்கப்படுகிறது. காரணம் இப்படத்தில் மொட்டையடித்து நெற்றிக்கண் வைத்து வித்யாசமாக தோற்றம் கொடுத்துள்ளார்.  கணேசன் சேகர்  இசையமைதுள்ள இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் செய்கிறார். வித்யாசமான தோற்றத்தில் வெளிவந்துள்ள இந்த போஸ்டர் இணையத்தை ஈர்த்து வருகிறது

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news