Inandoutcinema - Tamil cinema news

விஜய் 63 படத்தை பற்றிய அதிகார்பூர்வ அறிவிப்பு – விவரம் உள்ளே

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான திரைப்படம் சர்க்கார் ஆகும். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு ராதாரவி, பழ.கருப்பையா உள்பட பலர், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்துள்ளது. சர்க்கார் படத்திற்கு ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் சர்க்கார் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகள் நீக்கம், ஆளும் கட்சியின் எதிர்ப்பு என பல சர்ச்சைகள் எழுந்தாலும், அவை படத்தின் வசூலை பாதிக்கவில்லை. நடிகர் விஜயின் சர்கார் திரைப்படத்தில், அரசின் இலவச திட்டங்களுக்கு எதிரான கோஷத்தை ஆதரிக்கும் நோக்கில், விஜய் ரசிகர்கள் வீட்டிலிருக்கும் மிக்சி கிரைண்டர், லேப்டாப், சைக்கிள், டிவி போன்ற பொருட்களை தீயிலிட்டு விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இன்னிலையில் சர்கார் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்தப் படத்தில் விஜய் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். ஏற்கனவே, தெறி, மெர்சல் என்று விஜய்க்கு இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த அட்லீ தான் விஜயின் 63 வது படத்தை இயக்கப் போகிறார். இதில் ஹீரோயினாக நயந்தாரா அல்லது சமந்தா நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று காலை போடப்பட்டது. இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள், இயக்குநர் பெயர் உள்ளிட்ட விபரங்கள், சில மணித்துளிகள் முன்னதாக வெளியாகி உள்ளது. அதில், மெர்சல் மற்றும் சர்க்கார் படங்களில் இசையமைத்த எ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். மேலும் நகைசுவை நடிகர் விவேக் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயுடன் இந்த படத்தி இணைந்துள்ளார. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news