September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

30 வருடங்களுக்கு பிறகு ஆபிரிக்க அணிகளுக்கு நேர்ந்த சோகம். விவரம் உள்ளே

21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றான 2-வது சுற்றுக்கு முன்னேறும். இன்னிலையில் செனகல், கொலம்பியா அணிகள் சந்தித்தன.

டிரா கண்டாலே அடுத்த சுற்றை உறுதி செய்து விடலாம் என்ற நிலையில் செனகலும், கட்டாயம் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று சாத்தியம் என்ற உச்சக்கட்ட நெருக்கடியுடன் கொலம்பியாவும் ஸ்டேடியத்தில் ஆக்ரோஷமாக விளையாடின. 30வது நிமிடத்தில் கொலம்பியாவுக்கு பின்னடைவாக காயம் காரணமாக நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் வெளியேற நேரிட்டது.

முதல் பாதியில் இரு அணி தரப்பிலும் கோல் ஏதும் போடவில்லை. பிற்பாதியில் 74-வது நிமிடத்தில் கொலம்பியா கோல் போட்டது. கார்னர் பகுதியில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை கொலம்பியா வீரர் எர்ரி மினா தலையால் முட்டி வலையை நோக்கி திருப்பினார். பந்து செனகல் கோல் கீப்பர் காதிம் டியாயே கையில் பட்டு உள்ளே புகுந்து கோலாக மாறியது.

அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. முடிவில் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் ஆப்பிரிக்க அணியான செனகலை வீழ்த்தியது. லீக் சுற்று முடிவில் எச் பிரிவில் இருந்து கொலம்பியா, ஜப்பான் அணிகள் 2-வது சுற்றை எட்டின. செனகல் மற்றும் போலந்து அணிகள் வெளியேறின.

ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த செனகல், நைஜீரியா, துனிசியா, மொராக்கோ, எகிப்து ஆகிய 5 அணிகளும் இந்த முறை லீக் சுற்றை தாண்டவில்லை. 1986-ம் ஆண்டுக்கு பிறகு ரவுண்ட் 16 எனப்படும் நாக்-அவுட் சுற்றை எந்த ஆப்பிரிக்க அணியும் எட்டாதது இதுவே முதல் நிகழ்வாகும்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news