Inandoutcinema - Tamil cinema news

கமலுடன் இந்தியன்-2வில் நடிக்கும் பிரபல வாரிசு நடிகர்

சென்னை: சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படம் வரும் 29ம் தேதி உகலம் முழ்வதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆன கையுடன் சங்கர் அடுத்து கமல்ஹாசனை வைத்து இயக்கும் இந்தியன்-2 படத்தின் பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படம் கமலுக்கும் – இயக்குனர் சங்கருக்கும் ஒரு மாபெரும் பெயரை தேடித்தந்தது. இந்நிலையில், சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு அதே கூட்டணியில் இந்தியன்-2 உருவாகிறது. இதில் சேனாதிபதி பாத்திரத்தில் கமல் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாலத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் தமிழில் ஒகே கண்மனி, சோலோ, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

மேலும், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த மகாநதி படத்தில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த துல்கர்சமானுக்கு அப்படம் நல்ல பெயரை பெற்றுத்ததது.  தற்போது மீண்டும் தமிழ் படத்தில் அவர் ஒப்பந்தமாகை உள்ளது அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமையவுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news