September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல இயக்குனர். மகிழ்ச்சியில் ரசிகர்கள்

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் விக்ரம் வேதா படத்தின் மூலம் வில்லனாக மிரட்டியவர். தமிழ் திரையுலகின் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். விஜய் சேதுபதி தற்போது ஜூங்கா, 96, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி என பல படங்கள் கைவசம் வைத்துள்ளார். இன்று விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜூங்கா திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இன்னிலையில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கும் சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறார். பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் சீதக்காதி படத்தில் இருந்து மேக்கிங் ஆஃப் ஐயா என்ற வீடியோவை படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்த படத்தை பற்றிய ருசிகர தகவல் ஓன்று வெளியாகியுள்ளது.

கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் பாரதிராஜா ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கனவே இயக்குநர் மகேந்திரன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news