September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம். சோகத்தில் ரசிகர்கள் – விவரம் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனான அஜித் வடேகர் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 77. அஜித் வடேகர் இந்திய அணிக்காக 37 டெஸ்டுகளில் ஆடி 2,113 ரன்கள் சேர்த்துள்ளார்.

பத்ம ஸ்ரீ, வாழ்நாள் சாதனையாளர் விருது, அர்ஜுனா விருது உள்ளிட்ட இந்தியாவின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார். அவரது மறைவிற்கு, பிரதமர் மோடி, இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும், கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது :

வடேகர் காலமானார் என்கிற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். 90களில் அணி வீரர்களின் திறமைகளை வெளிக்கொணருவதில் முக்கியப் பங்காற்றினார். அவருடைய அறிவுரைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் எப்போதும் நன்றிக்கு உரியவர்களாக இருப்போம்.

இக்கடினமான நேரத்தில் அவருடைய குடும்பத்தினர் துயரத்தைத் தாங்கும் சக்தியுடன் இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன் என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். இவரது மரணம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news