Inandoutcinema - Tamil cinema news

சானியா மிர்சா வாழ்க்கை படத்திலிருந்து டாப்ஸி விலகளா ? விவரம் உள்ளே

tapsee

பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின், டோனி ஆகியோரின் வாழ்க்கையை படமாக எடுத்தனர். அந்த படம் நல்ல வெற்றியை பெற்றது. அதற்க்கு முன்னதாக குத்து சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கை கதையில் பிரியங்கா சோப்ரா நடித்து வெளியான மேரிகோம் திரைப்படம் நல்ல வசூல் குவித்தது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை படமாக வந்து பெரிய வரவேற்பு பெற்றதால், விளையாட்டு வீரர்கள் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகின்றன. கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது.

பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நெய்வால், பி.வி.சிந்து, துப்பாக்கி சுடும் வீரர் அபிநவ் பிந்த்ரா, மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் வாழ்க்கையும் படமாகிறது. இந்த வரிசையில் பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கையும் படமாக தயாராகிறது.

சானியாவின் சிறுவயது வாழ்க்கை, டென்னிஸ் விளையாட்டில் நிகழ்த்திய சாதனைகள், திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வையும் வாழ்க்கை படத்தில் காட்சிபடுத்துகின்றனர். இந்த படத்தின் உரிமைக்காக சானியா மிர்சாவுக்கு இந்தி பட நிறுவனம் பெரிய தொகை கொடுத்து இருக்கிறது.

இந்த படத்தில் சானியா மிர்சா வேடத்தில் நடிக்க டாப்சியை பரிசீலித்தனர். இப்போது சானியா மிர்சாவையே அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sania mrza

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news