மெய் மறந்த இன்பத்தை அளிக்கும் போதை: வசமாக சிக்கி கொண்ட பிரபல நடிகை

பிரபல திரைப்பட நடிகை அஸ்வதி பாபு போதை பொருட்களுடன் போலீசில் சிக்கிய சம்பவம் மலையால சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நடிகை அஸ்வதிபாபு (22) இவர் மலையாலத்தில் பிரபல சீரியல் நடிகை. மேலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், அஸ்வதி பாபு வீட்டில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக தீர்க்காரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்துள்ளது.

இதையடுத்து, போலீசார் நேற்று அஸ்வதி பாபுவின் வீட்டுக்கு சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, மெய் மறந்த இன்பத்தை அளிக்கும் MDMA என்ற போதைப்பொருள் பதிக்கி வைத்திருந்தந்தை போலீசார் கண்டு பிடித்தனர். போலீஸ் விசாரணையில் பெங்கலூரில் இருந்து போதை பொருளை கடத்தி வந்து கொச்சியில் விற்று வந்தது தெரியவந்தது. இதில், அஸ்வதிபாபுவுக்கு துணையாக அவரது கார் டிரைவரான பினோய் ஆபிரகாம் என்பவரும் செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிந்து இந்த வகையான போதை பொருளை அவர்களுக்கு சப்ளை செய்வது யார்? கேரளாவில்  அஸ்வதிபாபுவிடம் யாரெல்லாம் இதை வாங்கி சென்றுள்ளனர் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news