September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

தீபாவளி போட்டியில் பின்தங்கிய பிரபல நடிகர்கள் படம் – விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ்.

ஆனால் இந்த படத்துடன் போட்டி போடுவதாக அறிவித்த தல அஜித்தின் விஸ்வாசம் மற்றும் நடிங்கர் சூர்யாவின் என்ஜிகே படம் தள்ளி போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த மணியார் குடும்பம் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் சிவா விஸ்வாசம் படம் பொங்கலுக்குத்தான் வரும் என்று கூறிவிட்டுச் சென்றார்.

சூர்யாவின் என்.ஜி.கே விஜய்யின் சர்க்கார் படங்கள் கண்டிப்பாகத் தீபாவளிக்கு வரும் என்றிருந்த நிலையில் என்.ஜி.கே படம் தள்ளிப் போகும் நிலையில் உள்ளது. என்.ஜி.கே படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இருந்த ‘தீபாவளி 2018’ என்ற டேக் இருந்தது. சமீபத்தில் வெளிவந்த செகண்டு லுக்கில் அந்த டேக் காணவில்லை.

இயக்குநர் செல்வராகவன் உடல் நலக் குறைவால் அவதிப்படுவதால் எஞ்சியுள்ள படப்பிடிப்பு தாமதமாகும் நிலையுள்ளது. இதனால் என்.ஜி.கேவும் தீபாவளிக்கு ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சூர்யாவின் NGK படம் தீபாவளிக்கு வெளியாகாது என கூறப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news