September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

மீண்டும் மீண்டும் தவறு செய்யும் பேஸ்புக் நிறுவனம்..!

சென்னை: சென்னை: உலகின் மிக பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் 300 கோடிக்கும் அதிகமானோர் கணக்கு வைத்துள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 50 சதவீதம் ஆகும்.

பேஸ்புக் தளத்தை செய்திகள், விளையாட்டு, தொழில், நட்பு, சினிமா என பல்வேறு காரணங்களுக்காக தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நில்லையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலக அளவில் அரசியல் கட்சிகளுக்கு ஆன்லைன் புரோமோஷன் செய்யும் கேம்பிரிட்ஜ் அனால்டிகா என்ற தகவல் சேகரிக்கும் நிறுவம், பேஸ்புக்குடன் இணைந்து பயனாளிகளின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றது.

இது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், மக்களுக்கு பேஸ்புக் மீதான நம்பகத்தன்மை குறைய தொடங்கியது. குறிப்பாக அமேரிக்காவில் பேஸ்புக்கின் பங்குகள் கடும் வீழ்ச்சியை கண்டது.

இந்த பிரச்னையின் ஈரம் ஆறுவதற்குள் பேஸ்புக்கிற்கு அடுத்த பிரச்னை தொடங்கிவிட்டது. சமீபத்தில், பேஸ்புக் பயாணிகளின் தகவல்களை பிரபல செல்போன் நிறுவனங்களான ஆப்பில், சாம்சங், பிளாக் பெரி, மைக்ரோ சாப்ட், அமேசான் போன்ற 60 நிறுவனங்களுக்கு பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை விற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அமேரிக்காவில் வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இது பேஸ்புக் நிறுவனத்திற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

சோஷியல் மீடியா என சமூக வலைத்தளங்கள் மூலம் உலக மக்களை ஒரு இடத்தில் ஒன்றிணைத்து அவர்களின் விவரங்களை திருடி அவர்களிடம் நுகர்வோர் பொருட்களை கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம் என்று தொழிற்நுட்பவியளார்கள் கூறுகின்றனர்

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news