இணையத்தில் வைரலாகும் விஸ்வாசம் படப்பிடிப்புதள புகைப்படங்கள் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் படம் விஸ்வாசம். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், தம்பிராமய்யா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதிராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தது. சத்யஜோதி பிளிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இசை டி.இமான், வெற்றி ஒலிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபன் எடிட் செய்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதில் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அதில் நடிகர் அஜித் வெட்டி சட்டையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புகைப்படம் வெளியான சிறிது நேரத்திலேயே தல ரசிகர்கள் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news