Inandoutcinema - Tamil cinema news

தேசிய விருது பெற்ற படத்தின் ரீமேக்கில் தல அஜித் ? விவரம் உள்ளே

விவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடித்து இருக்கிறார்.

பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து இவரும் தல அஜீத்துடன் 4 வது முறையாக இணைந்துள்ளார். இப்படத்தை அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளார்.

மேலும் அஜித்தை வைத்து இயக்குநர் வினோத் இயக்கும் படம் இந்தி ரீமேக்காக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதன்படி இந்தியில் கடந்த 2016 – ம் ஆண்டு வெளியான பிங்க் படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பிங்க் படத்தில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற இப்படத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி பலரும் பாராட்டியிருந்தனர்.

தமிழில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news