September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி – ரஜினி 165 லேட்டஸ்ட் அப்டேட்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். காலா படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. சங்கரின் 2.0 படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என படுக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக வலம் வரவுள்ளாதாக கூறப்படுகிறது.

ரஜினியின் 165-வது படமான இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் சிம்ரன், த்ரிஷா,மாளவிகா மோகனன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் டேராடூன், டார்ஜிலிங் மற்றும் சென்னையில் நடைபெற்றது.

தற்போது, இந்த படத்தின் அடுத்த கட்ட ஷெடியூலுக்காக படக்குழு ஐரோப்பா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு 40 நாட்களுக்கு ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் படுக்குழு விரைவில் ஐரோப்பா செல்லவிருக்கிறது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news