Events

ஒரு குப்பைக் கதை பாடல் வெளியீடு!!!




பிலிம் பாக்ஸ் தயாரிப்பில் காளி ரங்கசாமியின் இயக்கத்தில் தமிழ் ட்ராமா வடிவத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஒரு குப்பைக் கதை.  இக்கதையில் நடன கலைஞர் தினேஷ் அவர்கள் கதாநாயகன் கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். இதில் மனிஷா யாதவ் அவருக்கு ஜோடியாக இடம் பெற்றுள்ளார்.

இப்படத்தின் காட்சிகளை மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீடு இன்று காலை சத்யம் சினிமாஸில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், ஸ்ரீகாந்த், இயக்குனர் சுசீந்திரன், சீனுராமசாமி என பல்வேறு திரைப்பிரபலங்கள் பங்கு பெற்றுள்ளனர். மேலும் இத்திரைப்படம் மே மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 






Related article