Events

80’s நடிகர் நடிகைகளை கவர்ந்த நடிகையர் திலகம் திரைப்படம்!!!




பழம்பெரும் நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப் பட்ட திரைப்படம் தான் நடிகையர் திலகம். இப்படத்தில் முன்னனி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் சாவித்ரி அவர்களின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். சாவித்ரி அவர்களின் வேடம் மிகவும் அருமையாக பொருந்திருக்கிறது கீர்த்தி சுரேஷிற்கு.

இவருக்கு கதாநாயகனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். இருவரும் இப்படத்தில் ஜெமினி கணேஷன் சாவித்ரியின் மறு உருவமாக தோற்றமளிப்பது இப்படத்தின் சிறப்பு.

நாக் அஸ்வினின் இயக்கத்தில் நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தில் சமந்தா, அனுஷ்கா, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் மிக்கி ஜெ. மேயரின் இசையில், டேனி சான்செஸ் லோப்சின் ஒளிப்பதிவில் நேற்று (11.05.2018) திரையரங்குளில் வெளியானது. இப்படத்தின் ப்ரிவியூ ஷோவை பல்வேறு நடிகைகள் மற்றும் நடிகர்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

அந்த புகைப்படங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.






Related article