Events

காளி படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு...




பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காளி. இப்படத்தில் விஜய் ஆண்டனி, சுனைனா, அமிர்தா ஐயர், ஷில்பா மஞ்சுநாத், யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ் என பல்வேறு திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். 

 

இப்படத்திற்கு விஜய் ஆண்டனி அவர்களே இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது ஒரு குடும்ப பாங்கான படமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த திரைப்படம் மே மாதம் 18 ஆம் தேதி திரையரங்குகளில் ஒளிபரப்பாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.