Inandoutcinema - Tamil cinema news

கதைக்கு தேவையாக இருந்தாலும் இந்த மாதிரி நடிக்க சம்மதிக்க மாட்டேன் – கீர்த்தி சுரேஷ்

திரை உலகில் நுழைந்த சில வருடங்களிலேயே முன்னணி நாடியகையாக உயர்ந்தவர் கீர்த்தி சுரேஷ் ஆகும். சமீபத்தில் வெளியான சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்த பிறகு தமிழ், தெலுங்கு பட உலகில் வலுவான இடத்தை பிடித்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : திரையுலகில் என்னை விட அழகும் திறமையும் உள்ள நடிகைகள் பலர் இருக்கிறார்கள்.

ஆனாலும் எனக்கு நல்ல கதைகளும் கதாபாத்திரங்களும் அமைவதற்கு அதிர்ஷ்டம்தான் காரணம். அதிர்ஷ்டம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதே நேரம் திறமையும் முக்கியம். சாவித்திரி வாழ்க்கை கதை படத்தில் நடித்த பிறகு அழுத்தமான கதைகளில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. கதைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன்.

கதைகள் கேட்கும்போது இதில் நடிக்கலாம் என்று மனம் சொன்னால் அதை ஏற்கிறேன். முத்த காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை. அதுபோன்ற காட்சிகளுடன் எனக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்றதால் அந்த பட வாய்ப்புகள் கைநழுவி போய் விட்டன. எனக்கு சவுகரியமாக இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன்.

கதைக்கு தேவையாக இருந்தாலும் சம்மதிக்க மாட்டேன். எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. முத்த காட்சிகளில் என்னால் சகஜமாக நடிக்கவும் முடியாது என நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். காசுக்காக கீழ்த்தரமான விடயங்களில் ஈடுபடும் சில நடிகைகளுக்கு மத்தியில் இவரது இந்த பேச்சுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news