Inandoutcinema - Tamil cinema news

ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்த இங்கிலாந்து அணி. விவரம் உள்ளே

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, முதல் 2 ஆட்டங்களில் தோற்று 0-2 என்ற கணக்கில் பின்தங்கியது. இன்னிலையில் 3வது ஒரு நாள் போட்டி நேற்று மாலை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே அதிரடி காட்டி வந்த இந்த ஜோடி முதல் விக்கட்டுக்கு 159 ரன்கள் சேர்த்து. ஜாசன் ராய் (82 ரன்கள்) ரன் அவுட்டாகி வெளியேறினார். இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய அலெக்ஸ் ஹெல்ஸ் மற்றும் பேர்ஸ்டோ ஜோடியும் அதிரடி காட்டியது. அற்புதமாக விளையாடிய பேர்ஸ்டோ சதம் விளாச, அலெக்ஸ் ஹெல்ஸூம் தன் பங்குக்கு சதத்தை பூர்த்தி செய்தார். 34 ஓவர்களில் இங்கிலாந்து அணி 310 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேர்ஸ்டோ (139 ரன்கள், 5 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள்) கேட்ச் ஆகி வெளியேறினார்.

அடுத்ததாக களமிறங்கிய ஜோஸ் பட்லர் (11 ரன்கள்) வந்த வேகத்தில் திரும்ப, கேப்டன் மோர்கெல், ஹெல்ஸூடன் இணைந்தார். இந்த ஜோடியும் ஆஸ்திரேலிய அணிக்கு ஆட்டம் காட்ட இங்கிலாந்து அணியின் ரன்வேகம் மள மள வென உயர்ந்தது. இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்தது.

ஒரு நாள் போட்டி வரலாற்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஹிமாலய இலக்கை நோக்கி அதிரடியாக ஆட நினைத்த ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்து 37 ஓவர்களில் 239 ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news