September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

இங்கிலாந்தை 161 ரன்களில் சுருட்டி வலுவான நிலையில் உள்ள இந்திய அணி – விவரம் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

முதல் நாளில் இந்திய அணி 6 விக்கட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி சிறிது நேரத்தில் எஞ்சிய விக்கட்டுகளையும் இழந்து 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிக பட்சமாக ரகானே 81 ரன்களும் விராட் கோலி 97 ரன்களும் அடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 50 ரன்களை கடக்கும் வரை விக்கட் விழாமல் பார்த்துக்கொண்டது. அதன் பின்னர் மளமளவென இங்கிலாந்து அணி சரிய தொடங்கியது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள தெரியாமல் குழம்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், வந்த வேகத்திலேயே பெவிலியன் அனுப்பப்பட்டனர். குறிப்பாக ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை மிரட்டினார்.

களத்தில் ஆட வந்த பேட்ஸ்மேன்கள், இந்திய வீரர்களின் விஸ்வரூபத்தால் வந்த வேகத்தில் கேட்ச் ஆகி வெளியேறினர். இந்நிலையில் 38.5 ஓவர்களில் 161 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் ஜோஷ் பட்லர் மட்டும் போராடி 39 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

பும்ரா, இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முகமது சமி 1 விக்கெட் எடுத்தார். 161 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டிய இந்திய அணி, 168 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நிதானமாக ஆடிய துவக்க ஜோடி 60 ரன்களில் பிரிந்தது.லோகேஷ் ராகுல் 36 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அரைசதத்தை நெருக்கிய தவான் [44] , ரஷீத் பந்து வீச்சில் கிரிசை விட்டு ஏறி வந்து ஆட முயற்சிக்கையில், விக்கட் கீப்பர் பைர்ஸ்டோவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 33 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news