Inandoutcinema - Tamil cinema news

இந்திய பவுலர்களை சமாளிக்கமுடியாமல் திணறும் இங்கிலாந்து அணி – விவரம் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் மைதானத்தில் இன்று துவங்கியது.

ஒரு வார கால ஓய்வுக்கு பிறகு இரு அணி வீரர்களும் புத்துணர்ச்சியுடன் களம் இறங்கி உள்ளனர். இந்த மைதானத்தில் இதுவரை 2 டெஸ்ட் மட்டுமே நடந்துள்ளன. 2011–ம் ஆண்டில் இலங்கையுடன் டிரா செய்த இங்கிலாந்து அணி 2014–ம் ஆண்டில் இந்தியாவை தோற்கடித்து இருந்தது. இந்த ஆடுகளத்தில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நிதானமாக ஆட நினைத்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே இந்திய அணியினர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசிய 2வது ஓவரின் முதல் பந்தில் எல்பிடபிள்யு முறையில் துவக்க ஆட்டக்காரர் ஜென்னிங்ஸ் ரன் ஏதுமின்றி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ஜோ ரூட்டும் தாக்குபிடிக்கமுடியாமல் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் 4 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக விக்கட் கீப்பர் பரிஸ்டோவ் 16 பந்துகளில் 6 ரன் எடுத்து பும்ரா பந்துவீச்சில் விக்கட் கீப்பர் ரிஷப் பாண்டிடம் கேட்ச்சாகி வெளியேறினார்.

நிலைத்து நின்ற துவக்க ஆட்டக்காரர் குக்கை ஹர்திக் பாண்டியா 17 ரன்களில் வெளியேற்றினார். இங்கிலாந்து அணி 18 ஓவர்கள் முடிவில் 40 ரன்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்து தவித்து வருகிறது. பட்லர் 3 ரன்னுடனும், ஸ்டோக்ஸ் 6 ரங்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 2 விக்கட்டும் இஷாந்த் சர்மா, ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கட்டும் கைப்பற்றியுள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news