Inandoutcinema - Tamil cinema news

அஜித், தனுஷ் படங்களில் நடித்த பிரபல நாயகிக்கு நிச்சயதார்தமா ? விவரம் உள்ளே

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகி பிரபலமானவர் நடிகை டாப்ஸி ஆகும். பின்னர் படிப்படியாக வளந்து பாலிவூட் வரை சென்றுவிட்டார். தற்போது இந்தியில் டாப்சிக்கு கைநிறைய படங்கள் உள்ளன. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த நாம் சபானா படத்தில் நடித்த பிறகே இந்தியில் அவரது மார்க்கெட் மளமளவென உயர்ந்தது.

அமிதாப்பச்சனுடன் நடித்த பிங்க் படமும் பெயர் வாங்கி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டாப்சிக்கும் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மத்யாசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஜோடியாக சுற்றும் படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவின.

சமீபத்தில் மும்பை ஓட்டலில் இருந்து கைகோர்த்தபடி வெளியே வந்தபோது, மத்யாசிடம் இருவரும் காதலிக்கிறீர்களா ? என்று நிருபர்கள் கேட்டதற்கு, இது சொந்த வி‌ஷயம். மேற்கொண்டு பேச விரும்பவில்லை என கூறினார். இந்த நிலையில் இருவருக்கும் ரகசியமாக நிச்சயார்த்தம் நடந்துள்ளதாக இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

டாப்சி குடும்பத்துடன் கோவா சென்று இருந்தார். அதே நேரத்தில் மத்யாசும் குடும்பத்தினருடன் கோவா வந்ததாகவும், அங்கு டாப்சிக்கும் மத்யாசுக்கும் ரகசியமாக நிச்சயார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை நடிகை டாப்ஸி அதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news