September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

பிரபல விளையாட்டு வீரரின் வாழ்க்கை படத்தில் நடிக்கும் துல்கர் சல்மான்

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராகவும் தமிழ் சினிமாவில் வளந்து வருபவர்தான் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் ஆகும். இவர் தற்போது விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, நடிகையர் திலகம் படங்களிலும் நடித்துள்ளார். இர்பான்கான், மிதிலா பால்கருடன் நடிகர் துல்கர் சல்மான் இந்தியில் நடித்து வெளியாகியுள்ள கர்வான் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இன்னிலையில் இன்னொரு இந்தி படத்தில் நடிக்கவும் அவர் ஒப்பந்தமாகி உள்ளார். அது கோலியின் வாழ்க்கை வரலாற்று படம் என கூறப்படுகிறது. இந்த படத்தை அபிஷேக் சர்மா இயக்குகிறார். இவர் ஏற்கனவே தேரே பின்லேடன், த ஷாக்கீன்ஸ், பர்மனு ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். கதாநாயகியாக சோனம் கபூர் நடிக்கிறார்.

இவர் அனுஷ்கா சர்மா கதாபாத்திரத்தில் வருகிறாரா? என்பது தெரியவில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது என கூறப்படுகிறது. இந்த படம் விராட் கோலியின் முழுமையான வாழ்க்கை கதையாக இருக்காது என்றும் கிரிக்கெட் விளையாட்டில் அவர் நிகழ்த்திய சாதனைகளை மையப்படுத்தி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் மற்றும் டோனியின் வாழ்க்கை படமாக வந்தது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news