September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

கலைஞரிடம் அரை வாங்கிய நடிகர் சிம்பு – விவரம் உள்ளே

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படமான, செக்க சிவத்த வானம் படத்தில் விஜய் சேதுபதி உட்பட முன்னணி திரை பிரபலங்கள் பலருடன் நடிகர் சிம்பு நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபு எஸ்டிஆர் படத்தின் தலைப்பு மாநாடு என வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளால் எஸ்டிஆர் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் இந்த சமயத்தில் அவர் கலைஞருக்கும் அவருக்குமான உறவை பற்றி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் கலைஞருக்கும் உங்களுக்குமான தருணங்கள் பற்றி கேட்டதற்கு, அவர் கூறியதாவது :

என் வீட்டுக்கு அவர் வந்தபோது, அவருடைய பேனாவைத் திருடியிருக்கேன் என சிரித்தவர், என்னால ஒரு விஷயத்தைக் கையாள முடியலைன்னா, அவருக்குதான் போன் பண்ணிப் பேசுவேன். அந்தளவுக்கு நெருக்கம். ஒரு முறை வல்லவன் படத்தைப் போட்டுக்காட்டுறேன்னு சொல்லிட்டு காட்டலை.

ரொம்ப நாள் கழிச்சு என்னைப் பார்க்கும்போது அதை ஞாபகம் வெச்சிருந்து என் கன்னத்துல அறைஞ்சார் பாருங்க. ப்ப்பா என்று தன் கன்னத்தில் கைவைத்து அந்தத் தருணத்தை ஒளிவு மறைவின்றி நடிகர் சிம்பு வெளிப்படுத்தியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news