Inandoutcinema - Tamil cinema news

அரசியல்வாதிகள் ஒரு ரூபாய் சம்பலம் வாங்குவதாக கூறுவது உட்டாலங்கடி வேலை – கமல்ஹாசன் பளிச்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில், அரசியலுக்காக சினிமாவை விடமுடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தின் பதிரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், கமல் பேசியதாவது:

விஸ்வரூபம்-2 படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட கதை.  நாடு இரண்டாக பிரிந்து கிடப்பதற்கு மத அரசியல் காரணம். அதில் எனக்கு வருத்தம் உண்டு. இந்த படத்தின் கதை உருவாக காரணம் அந்த வருத்தம்தான். கதையாக்கம், தொழிற்நுட்பம் என அனைத்து வகையிலும் படத்தை அடுத்த கட்டத்துக்கு எத்து சென்றிருக்கிறோம். படத்தில் அரசியல் தொடர்பான வசனங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் படம் எடுக்கவில்லை.

நான் அரசியலுக்கு வந்துவிட்டால் படங்களில் நடிப்பது குறைந்து விடும் என்று நினைக்க வேண்டாம். அடுத்து சபாஷ் நாயுடு, இந்தியன்-2 படங்களில் நடிக்கிறேன். மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியை எனது படங்களில் காட்ட மாட்டேன். அதை காட்டி கதையை கெடுக்கக்கூடாது. கொடிகை தனியாக காட்டுவேன். விஸ்வரூபம்-2 படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால் விஸ்வரூபம்-3 படத்தை எடுப்பது பற்றி யோசிப்பேன்.

விஸ்வரூபம் முதல் பாகத்துக்கு அன்றைய ஆட்சியாளர்களால் பிரச்னை ஏற்பட்டது. நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்று படத்தை ரிலீஸ் செய்தேன். இப்போது படத்தை எதிர்க்கும் கெட்டிக்காரத்தனம் யாருக்கும் இல்லை. அரசியல்வாதிகள் தியாகம் செய்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். ஒரு ரூபாய் சம்பலம் வாங்குவதாக சொல்வது சரியான உட்டாலங்கடி வேலை. என் தொழில், சினிமா. எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்த பிறகும் தொடர்ந்து நடித்தார். அவரைப்போல் கட்சி பணிகள் செய்து கொண்டே சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். என்னால் இயலாது என்று தெரியும்போது, நடிப்பதை விட்டு விடுவேன்.

விஸ்வரூபம்-1 படத்தை டி.டி.எச்.சில் ஒளிபரப்ப முடிவு செய்து இருந்தேன். ஆனால் தடைகள் ஏற்பட்டது. இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேறு ஒரு நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டேன். அதனால் டி.டி.எச்.சில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. தியேட்டர்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக புதிய தொழில் நுட்பத்தை தடுக்கக்கூடாது.

தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். முதலில் அங்கு உணவு பொருள் கட்டணத்தை குறைக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news