தமிழ் சினிமாவில் 20 நிமிட கதைக்கு கூட பஞ்சமா?

சொந்த கதையை வைத்து படம் எடுக்குற காலம் தமிழ் சினிமாவில் சமீப காலமாக குறைந்து வருகிறது. இதனால கதை திருட்டு, ஒரே கதையை வைத்து அடுத்தடுத்து பார்ட்-1, பார்ட்-2 என்று வரும் படங்கள் அதிகரித்து வருகிறது.

ஆனால், அதுபோன்ற படங்களும் ரசிக்கும் படியாக இல்லாததால் அட்டர் பிளாப் ஆகிறது. ஓகே, அப்போ இதுக்கு என்ன தான் வழி? இருக்கு.. வழி இருக்கு!

யோசிச்சு பாருங்க, இப்போல்லாம் ஒரு கதைய படமா எடுக்க இயக்குனர்கள் ரோம்ப சிரமப்படுறாங்க. 2 மணி நேரம் 15 நிமிடம் ஓடும் ஒரு படத்துக்கு 30 நிமிடம் பாட்டுக்கு ஒதுக்கனும், 20 நிமிடம் ஹீரோ ஸ்டண்ட், 20 நிமிடம் காமெடி, 10 நிமிடம் ஹீரோயின் ஓப்பனிங், 10 நிமிடம் ஹீரோ பில்ட்-அப்  கணக்கு பண்ணா 90 நிமிடம் படம் இதுலையே ஓடிடும். (அதாவது 1 மணி நேரம் 30 நிமிடம்).

மீதம் இருக்கும் 30 நிமிடத்துக்கு தான் கதையும், கிளைமாக்சும் இருக்கும். இதுக்கு பல கோடி செலவு ஆகுது. அப்படி இருந்தும் படம் சரியாக போகவில்லை என்றால் தயாரிப்பாளர்குக்கு தான் நஷ்டம். மேலும், பல இளம் இயக்குனர்கள் கணவு நிறைவேறாமலே போகுது. அதனால ஒரு சில இயக்குனர்கள் அந்த பார்முலாவ உடச்சு பல்டி பிளாட் படம் இயக்க முடிவு பண்ணி இருக்காங்க.

இதுல, முதல் முயற்சியா 25 நிமிடங்கள் என 6 பிளாட் கொண்ட ஒரு கதையை சிம்பு தேவன் இயக்குகிறார். அத இயக்குனர் வெங்கட் பிரபு – டிரைடண்ட் ஆர்ஸ் இணைந்து தயாரிக்கிறாங்க. படத்தோட பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

இதே டெக்னிக் தான் சமீபத்துல அதிகரிச்சுட்டு வர வெப் சீரியசிலும் நடக்குது. இரண்டரை மணி நேர புட்டேஜ 6 பார்டா எடுத்து வெப் சீரிஸ் கம்பெனிக்கு விற்று நல்ல பணம் பாக்குறாங்க சில இயக்குனர்கள்.

எது எப்படியோ சினிமாவ மொத்தமா அழிச்சுடாம இதுமாதி புதுசா டிரை பண்ணா எதுவும் தப்பில்லை!

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news