Inandoutcinema - Tamil cinema news

கேரளாவுக்கு மோடி அரசை விட அதிக நிவாரண தொகை வழங்கியது யார் தெரியுமா?

சென்னை: கேரளாவில் கடந்த 10 நாட்களாக கொட்டி தீர்த்த பருவ மழை குறைந்துள்ளது. அம்மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் பெய்த மழையால் 300க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. பலர் நிலச்சரிவில் புதையுண்டும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் மாயமாகி உள்ளனர்.

கேரள மக்களுக்கு உதவ இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகின்றனர். மழை குறைந்துள்ள நிலையில், அங்கு மீட்பு பணிகள் முழு வீச்சி நடந்து வருகிறது. மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள், தொழில் அதிபர்கள், நடிகர் நடிகைகள் என பலர் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

முன்னதாக கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி மத்திய அரசுக்கு கேரள அரசால் கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி கடந்த வாரம் கேரளாவில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். அதோடு மட்டுமின்றி உடனடியாக கேரளாவுக்கு ரூ.500 கோடி நிவாரணம் அறிவித்தார். மேலும், கேரளாவில் ஏற்பட்டது இயற்கை பேரிடராக மத்திய அரசால் அறிவிக்கபட்டது.

இதற்கிடையே கேரள மக்கள் அதிகம் வாழும் ஐக்கிய அரபு நாட்டின் அரசாங்கம் கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு காரணமாக அந்நாட்டு அரசு கடந்த வாரம் ஒரு அவரச கூட்டத்தை கூட்டியது. அதில் கேரளாவில் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்தது. இதையடுத்து கேரளாவுக்கு ஐக்கிய அரபு அரசு 700 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த தகவலை கேரள முதல்வர் பினராய் விஜயன் உறுதி செய்துள்ளார்.

கேரளாவில் வெள்ள பாதிப்புகளால் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா அரசாங்கமே ரூ.500 கோடி மட்டுமே  நிவாரணம் அறிவித்துள்ளது. ஆனால், கேரள மக்கள் அதிகம் வாழும் நாடு என்பதாலேயே அவர்களுக்கு ஐக்கிய அரபு அரசு இந்தியாவை விட அதிக நிவாரணத்தொகை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news