பி.வி.சிந்துவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து!

உலக டூர் பேட்மிட்டன் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பிவி.சிந்து இந்த அளவுக்கு பிரபலம் அடைந்துள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பம் தான். குறிப்பாக ஆரம்பம் முதலே பிவி.சிந்துவுக்கு விஜயகாந்தின் மகன் பிரபாகரன் ஸ்பான்சர் செய்து வந்தார். இது அவருக்கும் பெரும் உதவியாக இருந்தது. அது பிவி.சிந்துவுக்கு கடந்த ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அளவுக்கு பெயர் எடுத்து தந்தது.

இந்நிலையில், உலக டூர் பேட்மிட்டன் இறுதி போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பிவி.சிந்துவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனாவில் நடைபெற்ற இப்போட்டியில், உலக தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீரர்கள் கலந்துகொண்டனர். இதில், பிவி சிந்து ஆரம்பம் முதேல் அதிரடியாக விளையாடி வெற்றிகளை குவித்து இறுதிப்போட்டிக்கு முன்னேரினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப்பீட்டியில், இந்தியாவின் பிவி.சிந்துவும் – ஜப்பான் வீராங்கனையான நசோமி ஓகுஹராவை மோதினர். இதில், சிந்து முதல் செட்டில் 21 -19, இரண்டாவது செட்டில் 21-17 என்று எதிர் வீராங்கனைக்கு வாய்ப்பே கொடுக்காமல் வெற்றிபெற்று உலக சாதனை படைத்தார்.

இந்நிலையில், பிவி. சிந்துவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த பிவி.சிந்து அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்’. என்று கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news