Inandoutcinema - Tamil cinema news

கலைஞர் மறைவுக்கு கண்ணீர் விட்டு அழுத விஜயகாந்த் – பிரேமலதா : வைரல் ஆகும் விடியோ

சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நேற்று முன்தினம் மறைந்தார். கலைஞர் இறந்த செய்தி கேட்டு தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து பலர் தங்கள் இரங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தெமுதிக தலைவர் விஜயகாந்த் கலைஞர் இறந்த செய்திகேட்டு மிகவும் வேதனையோடு நேற்று ஓரு வீடியோ பதிவை டிவிட்டரில் வெளியிட்டிருந்தார்.பின்னர் சிறிது நேரத்தில் கேப்டன் அவரது மனைவி பிரேமலதாவுடன் மீண்டும் ஒரு விடியோவை பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் மறைந்த கலைஞருக்கு இன்று அவர் மீண்டும் ஒரு நினைவு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

டாக்டர் கலைஞர் அவர்களுக்கு,

உலகமே உங்களை கலைஞரே! என்று அழைத்தாலும்

உணர்வுப்பூர்வமாக உங்களை

அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்து

உங்களுடன் பழகிய அந்த நாட்களை

எண்ணி வியக்கிறேன், விம்முகிறேன்.

தள்ளாத வயதிலும் ஓய்வுக்கே ஓய்வு!

என்பதன் அர்த்தத்தை ‘உழைப்பு’

என்று மாற்றிக்காட்டிய ஒப்பற்ற தலைவரே!

 

அந்தி சாயும்பொழுது ஒரு சூரியன் மறைவது இயற்கை.

ஆனால், 07.08.2018 அன்று மாலை 6.10 மணியளவில்

இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ!

என்று என்னும்வண்ணம், இவ்வுலகையே இருட்டாக்கியது

போன்ற ஒரு உணர்வை தந்து சென்றவரே!

 

உங்கள் உடல் இவ்வுலகைவிட்டு பிரிந்தாலும்,

உங்கள் சரித்திரம் சகாப்தமாய்

என்றும் எங்களுடனேயே இருக்கும்

உங்களை வணங்குகிறேன்.

 

உங்களின் நினைவாக என்றென்றும்…

 

தமிழன் என்று சொல்லடா!

தலை நிமிர்ந்து நில்லடா!

 

என்ற  உங்கள் வாசகத்துடன்.

இப்படிக்கு உங்கள் விஜி என்னும் விஜயகாந்த்.

தெமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எப்போதுமே கலைஞர் மீது ஒரு தனி பாசம் இருந்திருக்கிறது. விஜயகாந்த் – பிரேமபலதா திருமனத்தை கூட கருணாநிதி தான் நடத்தி வைத்தார். அந்த அளவுக்கு அவர்களுக்குள் ஒரு தந்தை – பிள்ளை உறவு இருந்தது. தற்போது அமெரிகா சென்றுள்ள விஜய்காந்த், கலைஞர் இறந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்து அனுதாபங்களை பகிர்ந்துகொண்டுள்ளது பார்ப்பவர்களை கண்கலங்க செய்கிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news