நடிகர் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தில் இணைந்த பிரபல இயக்குனர் – விவரம் உள்ளே

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன் ஆகும். அதை தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையையும், அடையாளத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதித்துவிட்டார். தானா சேர்ந்த கூட்டம் படம், விக்னேஷ் சிவனுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

சூர்யாவுக்கு மீண்டும் ஒரு வெற்றி வாய்ப்பு கொடுத்ததாக இந்தப் படம் அமைந்திருந்தது. அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, இயக்குனர் செல்வராகவனுடன் முதன்முறையாக இணைந்துள்ள என்ஜிகே படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகை சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் பாடலாசிரியராக இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளதாவது : இயக்குனர் செல்வராகவனுடன் பணிபுரிய வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறி உள்ளது. படத்திற்காக நல்ல பாடல்களை எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

என்.ஜி.கே. தீபாவளிக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் படப்பிடிப்பு முடியாததால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news