ஒரு இயக்குநர் தன் அடையாளத்தை இழந்துடாம படத்தை இயக்கனும் – வசந்த பாலன்

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளை படமாக எடுப்பவர், இயக்குநர் வசந்தபாலன் ஆகும். சிலகால இடைவெளிக்குப் பிறகு நடிகரும் இசையமைப்பாளரான ஜி.வியை வைத்து ஜெயில் படத்தை இயக்கியிருக்கும் வசந்தபாலன் இன்றைய திரைத்துறையை பற்றி சமீபத்திய பெட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : இன்னைக்கு சினிமா ரொம்ப மோசமான சூழல்ல இருக்கு.

நடிகர்கள் தயாரிப்பாளரா மாறணும், இல்லைனா இயக்குநர்கள் தயாரிப்பாளரா மாறணும்ங்கிற நிலை. ஆன்லைன்ல உடனுக்குடன் படங்கள் திருட்டுத்தனமா வந்துடுது. தியேட்டர்ல மூணு நாள்தான் படம் ஓடுது. பரியேறும் பெருமாள் படத்துக்கு நல்ல தயாரிப்பாளர் கிடைச்சும், ரிலீஸூக்குத் தியேட்டர்கள் கிடைக்கலை.

பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை. மீடியமான பட்ஜெட்ல படம் எடுக்கிறவங்களுக்குப் பெரிய பிரச்னைகள் இருக்கு. வெப் சீரிஸ் அது இதுனு பல விஷயங்கள் அறிமுகமாகியிருக்கிற சூழல்ல, ஒரு இயக்குநர் தன் அடையாளத்தை இழந்துடாம ஒரு படத்தை உருவாக்குறது சவாலான விஷயம். அந்த சவாலை நான் வெற்றிகரமா கடந்துக்கிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன் என இயக்குனர் வசந்த பாலன் கூறியுள்ளார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news