நெல் ஜெயராமன் இறப்பு குறித்து தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்த பிரபல இயக்குனர்

நெல் ஜெயராமன் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர் இன்று காலை காலமானார். இவரது இறப்புக்கு தமிழ் திரை பிரபலங்கள் சிவகார்த்திகேயன், சூரி, சத்யராஜ், கார்த்தி உள்ளிட்ட பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இன்னிலையில் நெல் ஜெயராமன் இறப்பிற்கு இயக்குனர் தங்கர் பச்சான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது : எல்லாவற்றையும் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர் விட்டுச்சென்ற பணியைச் செய்ய யார் இருக்கிறார்கள் ? மரபு மாற்று பயிர்களுக்கு எதிராக போராடியவர். அடுத்த தலைமுறைகளுக்காகவே வாழ்ந்தவர். நெல் ஜெயராமன் விட்டு சென்ற பணியை அரசு தொடர வேண்டும். எதை எதையோ பள்ளிப்பாடங்களில் கற்றுத்தருபவர்கள் விவசாயம் குறித்து கட்டாயம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

தமிழக முதல்வர், வேளாண்மை அமைச்சர், பள்ளிக்கல்வி அமைச்சர் அனைவருமே உழவு குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். எனவே அவர் விட்டுச்சென்ற பணியைத்தொடர கடமை இருக்கிறது. நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும். அது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news