Inandoutcinema - Tamil cinema news

இந்த கதாப்பாத்திரத்தில் வேறு யாரையும் என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை – ஸ்ரீகணேஷ்

எட்டு தோட்டாக்கள் படத்தின் மூலமே தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானவர்தான் ஸ்ரீகணேஷ் ஆகும். இந்த படம் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. தனித்துவமான கதைகளை கையாண்டு, முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர்களான கார்த்திக் நரேன், லோகேஷ் கனகராஜ் பாணியில் தனக்கான இடத்தை தன்னிச்சையாக உருவாக்கியவர்.

இவர் தற்போது அதர்வாவை வைத்து, குருதி ஆட்டம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தற்போது, எல்லா படங்ளிலுமே அழுத்தமான முத்திரையை பதிக்கும் ராதாரவி மற்றும் ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும், இந்த குருதி ஆட்டம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இது பற்றி இயக்குனர் ஸ்ரீ கணேஷ் கூறியதாவது : ராதாரவி, ராதிகா என் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, நிச்சயமாக அவர்கள் இதில் நடிப்பது படத்திற்கு மிகப்பெரிய கவன ஈர்ப்பாக அமையும். இந்த கதையை எழுதியதில் இருந்தே இவர்களை தவிர வேறு யாரையும் என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை.

முதலில் இவர்கள் என் கதையை கேட்பார்களா என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது, ஆனால் நான் கதாபாத்திரத்தை எழுதியிருந்த விதம் அவர்களை கவர்ந்தது என்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமான விஷயம். முழுமனதோடு இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்கள். இந்த படத்தின் நாயகி தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது, நாயகி அறிவிப்பு நிச்சயம் எல்லோரது கவனத்தையும் பெறும் என இயக்குனர் ஸ்ரீகணேஷ்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news