பிரபல நடிகருடன் முதல் முறையாக இணையும் பிரியா பவானி சங்கர் – விவரம் உள்ளே

இயக்குனராக இருந்து நடிகராக தன்னை வளர்த்துக்கொண்டவர்களில் ஒருவர்தான் எஸ்.ஜே.சூர்யா ஆகும். நிறைய படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் கார்த்திக் சுப்புராஜின் இறைவி படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ படத்தில் வில்லனாகவும் மிரட்டினார்.

இதனை தொடர்ந்து விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்ததன் மூலம் பெரும்பான்மை ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டார். இவர் தற்போது ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார். இவருடைய நடிப்பில் அடுத்ததாக நெஞ்சம் மறப்பதில்லை, இரவாக்காளம், உயர்ந்த மனிதன் போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

இந்த படங்களை தொடர்ந்து எஸ் ஜெ சூர்யா இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் தலைப்பு மற்றும் அதன் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

மான்ஸ்டர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார். விரைவில் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news