சினிமாக்களில் நாம் பார்த்திராத சண்டைக்காட்சி விஸ்வாசம் படத்தில் இருக்கிறது – சிவா

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக சிவா – அஜித் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இமான் மற்றும் திலீப் சுப்ராயன் இணைந்துள்ளனர்.

ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இன்னிலையில் இந்த படத்தை பற்றி சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்ராயன் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : அஜித் சார் மிகவும் கண்ணியமான, எளிமையான நபர். ஒவ்வொரு சண்டைக்கலைஞரையும் அவர் மதிக்கும் விதம் அவர்களுக்கு மிகப்பெரிய வியப்பாக இருந்தது. தொழில் என்று வந்து விட்டால் அவர் ஒருபோதும் குறுக்கிட மாட்டார். எப்போதும் எங்கள் முடிவுகளை முன்னெடுத்து செல்ல தயாராக இருக்கிறார். ட்ரெய்லரில் பார்த்து அனைவரும் பாராட்டும் மழை சண்டைக்காட்சியை பற்றி சிவா எனக்கு விவரித்த போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அஜித் சாரின் பைக் ஸ்டண்ட் பார்வையாளர்களுக்காக மிகவும் பரபரப்பாகவும், அதே நேரம் எமோஷனல் விஷயங்களையும் கொண்டிருக்கும். இதை பற்றி மேலும் சொல்ல முடியாது.

அதை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும் என சண்டைப்பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் கூறியுள்ளார். இவரை பற்றி இயக்குனர் சிவா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : விஸ்வாசம் படத்தில் மொத் தம் 4 ஆக்சன் பகுதிகள். நான்குமே கதையுடன் ஒட்டியே இருக்கும். அஜித் ஏன் அடிச்சார், எதுக்கு அடிச்சார் என்கிற காரணம் அழுத்தம் திருத்தமாக ரொம்ப உணர்வுபூர்வமா இருக்கும். இதுவரை சினிமாக்களில் நாம் கண்டிப்பாக பார்த்திராத பைக் சண்டைக்காட்சி ஒன்றும் இருக்கிறது. சண்டைக் காட்சி இயக்குநராக திலிப் சுப்பராயன் முதல்முறையாக எங்கள் அணியில் இணைந்திருக்கிறார் என இயக்குனர் சிவா கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news