Inandoutcinema - Tamil cinema news

இயக்குனர் சிவாவிற்கு குவியும் பாராட்டுக்கள் – வைரலாக்கிய தல ரசிகர்கள்

விவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடித்து இருக்கிறார்.

பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து இவரும் தல அஜீத்துடன் 4 வது முறையாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விசுவாசம் படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரோபோ சங்கர், யோகி பாபு, கோவை சரளா, தம்பி ராமையா உட்பட முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பின் போது ரசிகர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது.

சமீபத்தில் நடிகர் அஜித், ஷாலினியுடன் வெளி இடத்திற்கு வருகை தந்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. இன்னிலையில் இப்படத்தில் மதுரை, தேனியை சேர்ந்த 300 க்கும் அதிகமான நாடக கலைஞர்கள் பணியாற்றுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாட்டுப்புற கலையை சார்ந்தவர்களுக்கும் தல படத்தில் வாய்ப்பளித்த இயக்குனர் சிவாவிற்கு பொது மக்களிடமிருந்தும், திரை பிரபலங்களிடம் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news