எஸ்.எ சந்திரசேகர் பற்றி ருசிகர தகவல் வெளியிட்ட இயக்குனர் ஷங்கர் – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் இயக்குனர் ஷங்கர் ஆகும். இவரது இயக்கத்தில் சில நாட்கள் முன்னதாக அவரது இயக்கத்தில் வெளியான 2.0 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அவர் சமீபத்திய பேட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த ருசிகர தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது : டி.எம்.இ. படிச்சி முடிச்சிட்டு, ஒரு பேக்டரில வேலைக்குப் போயிக்கிட்டிருந்தேன்.

நல்லவேளையா ஸ்டிரைக் நடந்து பேக்டரியை மூடிட்டாங்க. எனக்கோ சினிமாவுக்குள்ளே போகணும்னு ஆசை. ஆனா அப்பாவுக்கு நான் சினிமாவுக்குள்ளே போறதுல விருப்பமில்லை. அம்மாவுக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான். அப்ப, அம்மா செஞ்சதை மறக்கவே முடியாது. அம்மாவுக்கு இங்கிலீஷ்லாம் பெருசா தெரியாது. ஆனாலும் பேப்பர்ல டி.எம்.இ. படிப்புக்கு ஆட்கள் தேவை விளம்பரம் வந்துருக்கானு பாத்துக்கிட்டே இருப்பாங்க.

இங்கிலீஷ்ல வந்திருக்கிற அந்த விளம்பரங்களை, கஷ்டப்பட்டு, கண்டுபிடிச்சு, எங்கிட்டக் காட்டுவாங்க. ‘இந்தக் கம்பெனில வேலை இருக்குன்னு போட்ருக்குடா’ன்னு சொல்லுவாங்க. எனக்கு ஆச்சரியமா இருக்கும். இந்த சமயத்துல நாடகங்கள்ல நடிச்சிட்டிருந்தேன். அதைப் பாத்துட்டு, எஸ்.ஏ.சந்திரசேகரன் சார், என்னை சினிமாவுக்குள்ளே கொண்டு வந்தாரு. அவர்கிட்ட உதவி டைரக்டரா சேர்ந்தேன். அப்பாவுக்கு சுத்தமா பிடிக்கல. ஒரு வேலைக்குப் போய் மாசம் பொறந்தா சம்பளம்னு இல்லாம, என்ன இவன் இப்படிப் பண்றான்’னு வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தார்.

இந்த சமயத்துல எஸ்.ஏ.சந்திரசேகர் சாருக்கு தேங்க்ஸ் சொல்லணும். ஏன்னா, எவ்ளோ பிரச்சினைகள் இருந்தாலும், கஷ்டங்கள் இருந்தாலும் மாசாமாசம் 5ம் தேதியானாப் போதும், சரியாக சம்பளம் கொடுத்துருவார் சந்திரசேகரன் சார். இந்தச் சம்பளம் மாசாமாசம் குறிப்பிட்ட தேதில கிடைக்குதுங்கறதால, அப்பாவுக்கு நிம்மதி. அதன் பிறகுதான், சினிமா வேலையை ஏத்துக்கிட்டாரு அப்பா. சொல்லப்போனா, அந்த மாத சம்பளம்தான் என்னைக் காப்பாத்துச்சு என இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news