September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

எந்திரன் பட சர்ச்சையால் அபராதம் செலுத்திய இயக்குனர் சங்கர் – விவரம் உள்ளே

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 180 கோடி பட்ஜெட்டில் கடந்த 2010-ல் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்படம்தான் எந்திரன் ஆகும். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் கதைக்கு உரிமை கோரி ஆரூர் தமிழ்நாடன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், தன்னுடைய அனுமதி இல்லாமல் எந்திரன் படம் எடுத்ததால், காப்புரிமைச் சட்டத்தின் கீழ் தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க இயக்குனர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாட்சி விசாரணைக்கு இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராகவில்லை.

மேலும், படப்பிடிப்புக்காக இயக்குநர் ஷங்கர் வெளியூர் சென்றிருப்பதால், வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென்று அவர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஏற்கனவே சாட்சி மற்றும் குறுக்கு விசாரணைகளை விரைந்து முடிக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், சாட்சி விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் மீண்டும் கால அவகாசம் கோருவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.

மேலும், இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அபராத தொகையை புளூ கிராஸ் அமைப்பிடம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news