சூர்யா ரசிகர்களுக்கு வேண்டுகோள்விடுத்த இயக்குனர் செல்வராகவன் – விவரம் உள்ளே

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் என்.ஜி.கே ஆகும். இத்திரைப்படம் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வருகிறது. டி. ஆர். பிரகாஷ்பாபு மற்றும் டி. ஆர். பிரபு ஆகியோரின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து, ரிலையன்ஸ் என்டர்டெய்மன்ட் வெளியிட உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. அதுவே இறுதிகட்டப் படப்பிடிப்பாக இருக்கும் என்றும், டிசம்பர் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அடிக்கடி சூர்யா ரசிகர்கள், என்.ஜி.கே படத்தினுடைய அப்டேட் எப்போ வரும் என படக்குழுவினரிடம் சமூகவலைத்தளத்தில் கேள்வி எழுப்பிவந்தார்கள். இது தொடர்பாக இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது : என் மனமார்ந்த வேண்டுகோள். நாங்கள் அமைதியாக, கடுமையாக உழைத்து வருகிறோம்.

அப்டேட்டுகள் சரியான நேரத்தில் வரும். மூன்று நாளைக்கு ஒரு முறையோ, வாரா வாரமோ வராது.. எங்களுக்கு நீங்கள் பக்க பலமாக இருந்தால் எங்கள் இலக்கை நோக்கி இன்னும் கடுமையாக உழைக்கும் பலம் எங்களுக்குக் கிடைக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் என இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news