இது என் தம்பி தனுஷ் கற்றுகொடுத்த பாடம் என கூறிய செல்வராகவன் – விவரம் உள்ளே

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் என்ஜிகே ஆகும். இத்திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜா இசையில், டி. ஆர். பிரகாஷ்பாபு மற்றும் டி. ஆர். பிரபு ஆகியோரின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து, ரிலையன்ஸ் என்டர்டெய்மன்ட் வெளியிட உள்ளது. இத்திரைப்படத்தில் சூர்யா, ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சனவரி மாதம் படப்பிடிப்பு ஆரம்பமானது. இந்த படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு தாமதமானதால் என்ஜிகே திரைப்படம் பொங்கலுக்கு தள்ளிப்போயுள்ளது. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வடசென்னை படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.

மேலும், மாரி 2 மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் என் தம்பி வெகு வருடங்களுக்கு முன்பு எனக்கு கற்றுக் கொடுத்த பாடம், நான் இன்று வரை கடைபிடிப்பது. மற்றவரை ஒரு வேலை செய்யச் சொல்வதை விட நாமே செய்து விடலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவை இயக்குனர் செல்வராகவன் இந்த காலை பதிவிட்டுள்ளார். விரைவில் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தனுஷ் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட முக்கியமான தனுஷ் படங்களை இயக்கியவர் செல்வராகவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news