Inandoutcinema - Tamil cinema news

ரஜினி முருகன் கதையே என்னோடதுதான் – இயக்குனர் சமுத்திரக்கனி அதிரடி பேச்சு

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் செங்கோல் என்ற கதையின் கருவை வைத்து சர்கார் படமாக எடுத்துள்ளதாக சமீபத்தில் வருண் என்கிற ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் எதிர்பாராத விதமாக வருண் ராஜேந்திரனுடன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமரசம் செய்து கொண்டார். அதன்படி வருண் ராஜேந்திரனின் பெயரை டைட்டில் வெளியிட்டு நன்றி தெரிவிப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டு படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியானது. இந்நிலையில் இயக்குநர் சமுத்திரக்கனி இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது : யாரோ ஒருவருக்கு தோன்றும் கதை மற்றொருவருக்கு தோன்றுவதில் தப்பில்லை. நான் ஒருநாள் சிவகார்த்திகேயனை அழைத்து கதை சொன்னேன்.

அந்தக் கதை சிறு சிறு மாற்றங்களுடன் ரஜினி முருகன் படமாக உருவாகி வருவதாக அவர் என்னிடம் கூறினார். அப்போது நான் எதுவும் சொல்லவில்லை. படத்தின் இயக்குநரை அழைத்துப் பேசி அந்தப் படத்தில் நானே நடித்தேன். மொத்தமே 7 விஷயங்கள் தான் கதையில் இருக்கிறது. அதைத்தான் சினிமாவில் மாற்றி மாற்றி எடுத்து வருகிறோம்.

இதை கதை திருட்டு என்று சொல்வதே எனக்கு கஷ்டமாக இருக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளில் மாற்றி மாற்றி முகத்தில் கரியைப் பூசிக்கொள்ளக்கூடாது. பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயத்தை இவ்வளவு தூரம் எடுத்துச் சென்றதில் எனக்கு உடன்பாடில்லை. எனது படங்கள் எல்லாம் நாளிதழில் வரும் செய்திகள்தான்.

அதற்கு முதலில் உங்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். எனக்கு கதை தருவதே பத்திரிக்கையாளர்கள்தான் என இயக்குனர் சமுத்திரக்கனி கூறியுள்ளார். ரஜினி முருகன் திரைப்படம் இவரது கதை என இயக்குனர் சமுத்திரக்கனி கூறியது இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news