கமல், ரஜினி இருவரும் ஆட்சியை பிடிக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது என கூறும் பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வருபவர்கள்தான் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே அரசியல் அறிவிப்பு வெளியிட்டது முதல் தற்போது வரை ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். இன்னிலையில் ரஜினிகாந்த் தனது புதிய படத்தை ரிலீஸ் செய்வதற்கு கூட்டம் சேர்க்கவே ஏதாவது ஒன்றை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார் என இயக்குநர் ஷக்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இவர் தற்போது நடிகர் பிரபு தேவாவை வைத்து சார்லி சாப்ளின் 2 படத்தை இயக்கி வருகிறார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் கூறியதாவது : கமல், ரஜினி இருவரும் ஆட்சியை பிடிக்க நினைப்பது காமெடியாக உள்ளது. ஜெயலலிதாவுக்குப் பிறகு முதல்வரும், துணை முதல்வரும் அதிமுகவை வழிநடத்தி வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் கூறுவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எப்படியாவது ஆட்சியைப் பிடித்து முதல்வராகிவிடலாம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அதிமுக இருக்கும்வரை அது ஒருபோதும் நடக்காது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் புதிது புதிதாக கட்சி ஆரம்பித்து கொடியை அறிமுகப்படுத்துகிறார்கள்.

 

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்க நினைப்பது காமெடியாக உள்ளது. கமல் மைக்கை பிடித்துப் பேச தெரியாதவர். ரஜினிகாந்த் தனது புதிய படத்தை ரிலீஸ் செய்வதற்கு கூட்டம் சேர்க்கவே ஏதாவது ஒன்றை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் எப்படி ஆட்சியைப் பிடிப்பார்கள் ? என இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news