Inandoutcinema - Tamil cinema news

எனக்கு கலைஞர் மீது விமர்சனங்கள் இருக்கு – இயக்குனர் பா. ரஞ்சித்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞருக்கு கலை வணக்கம் என்ற புகழஞ்சலி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இயக்குனர் பா.ரஞ்சித் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது : சிறு வயதில் பெரியபாளையம் வழியாக கலைஞர் செல்கிறார் என்று சொல்லக் கேட்டு அவரை நான் பார்த்திருக்கிறேன்.

என்னுடைய அப்பா தி.மு.க.காரர். வீட்டு வாயிலை கூட உதயசூரியன் வடிவில் வடிவமைத்திருந்தார். அவர் வழியாக தான் எனக்கு கலைஞர் அறிமுகமானார். என்னுடைய தாத்தா தீவிர அதிமுககாரர். ஆனால் அவர் கலைஞரின் தீவிர ரசிகர். அவருடன் தான் கலைஞரின் பராசக்தி படத்தை பார்த்தேன். எனது பள்ளி நாட்கள் கல்லூரி நாட்கள் என பலமுறை பராசக்தி படத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் பார்த்துள்ளேன்.

நான் திரைத்துறையில் படம் இயக்க முடிவு செய்த பின்பும் பராசக்தி படத்தை பார்த்துள்ளேன். பராசக்தி படம் எனக்கு முக்கியமான வழிகாட்டி என்றுதான் சொல்வேன். பராசக்தி மிகப்பெரிய விளைவை தமிழ்சினிமாவில் ஏற்படுத்திய படம். அந்தப் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை மிகமுக்கியமான அரசியல் பேசப்பட்டுள்ளது.

அண்ணாவால் வளர்த்தெடுக்கப்பட்ட மிக முக்கியமான ஆயுதம் தான் கலைஞர். உண்மையிலேயே எனக்கு கலைஞர் மீது விமர்சனங்கள் இருக்கு. அதைப் பேசுவதற்கான மேடை இது அல்ல. ரஜினிகாந்த் என்னிடம் கூறும்போது, எனக்கு பிடித்த, நான் பார்த்து வியந்த தலைவர் கலைஞர்தான் என நடிகர் ரஜினி கூறியிருப்பதாக இயக்குனர் ரஞ்சித் கூறியுள்ளார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news