காலா படத்திற்கு பிறகு பிரமாண்ட படத்தை இயக்கப்போகும் ரஞ்சித் – விவரம் உள்ளே

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான திரைப்படம் காலா ஆகும். காலா திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குனர் ப.ரஞ்சித் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நமா பிக்சர்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இத்திரைப்படம், ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக, பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் தயாரிப்பு நிறுவனத்துடன் இப்படத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டு, முதற்கட்ட பணிகளை ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். இதற்காக வட மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் கிராமங்களுக்குச் சென்று தீவிரமாக தகவல்களை சேகரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்க இருக்கிறது. பிர்சா முண்டா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முன்னணி நடிகருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திற்கு பாலிவுட் உலகில் இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news