September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

சர்வதேச விருது விழாவில் தமிழில் பேசி கெத்து காட்டிய இயக்குனர் ராம். காணொளி உள்ளே

கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் இயக்குனர் ராம் ஆகும். இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற தவறினாலும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. பின்னர் நான்கு வருடம் இடைவெளிவிட்டு அவரது நடிப்பில் அவரே இயக்கி வெளிவந்த திரைப்படம்தான் தங்கமீன்கள் ஆகும். இந்த படம் 3 தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகள் வாங்கி குவித்தது.

சிறந்த திரைப்படத்திற்க்கான தேசிய விருது, இந்த படத்தில் நடித்த குழந்தை சாத்தனாவிற்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதும், இப்படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை பாட்டிற்கு வரிகள் எழுதிய நா.முத்துக்குமாருக்கும் தேசிய விருது வழங்கபட்டது குறிப்பிடத்தக்கது. திரும்பவும் நான்கு வருட இடைவெளிவிட்டு நடிகை ஆண்ட்ரியாவை வைத்து தரமணி படத்தை இயக்கி கடந்த வருடம் வெளியிட்டு இருந்தார்.

இந்த படமும் அவருக்கு சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை அள்ளியது. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும்பாலும் இவரது படங்களுக்கு நான்கு வருட இடைவெளி இருக்கும். ஆனால் இந்த முறை தாமதிக்காமல் தாமதிக்காமல் தனது அடுத்த படத்துக்கான வேலைகளை வேகமாக கவனிக்க தொடங்கினர். தற்போது அவர் இயக்கி மம்மூட்டி, சாதன ஆகியோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் பேரன்பு.

இப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே சர்வதேச அளவில் விருதுகள் வாங்க தொடங்கிவிட்டது. ஷாங்காய் மற்றும் ரொட்டர்டாம் விருது விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அந்த விழாவில் இயக்குனர் ராம் தமிழில் பேசியும் தமிழின் தொன்மையை பற்றியும் பேசியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த காணொளி மேலே கொடுக்கப்பட்டுள்ளது. பேரன்பு படத்தின் இசை மற்றும் டீசெர் வரும் 15ம் தேதி வெளியிடப்படவுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news